எதிர்காலத்தின் உயர்ந்த தெளிவுத்திறன் 8K

OLEDயிலிருந்து கிலேட் வரை, வெப் OS லிருந்து ஆண்ட்ராய்டு OS வரை, 4கே விலிருந்து 8கே வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.;

Update:2022-10-04 19:11 IST

20 வருடங்களுக்கு முன் நாம் தொலைக்காட்சியில் பார்த்த காட்சியின் தெளிவுக்கும் இன்று நாம் பார்க்கும் காட்சியின் தெளிவிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த தெளிவுத்திறனில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு காரணம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான். OLEDயிலிருந்து கிலேட் வரை, வெப் OS லிருந்து ஆண்ட்ராய்டு OS வரை, 4கே விலிருந்து 8கே வரை தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

மேலும் ஸ்மார்ட் டிவியின் வருகை நாம் என்ன பார்க்க வேண்டும், எப்போது பார்க்க வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்கும் அளவிற்கு நமக்கு வசதி அளித்துள்ளது. இவற்றின் வளர்ச்சி எந்த டிவியை வாங்குவது என்ற குழப்பத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய வளர்ச்சி எவ்வாறு ஏற்பட்டது என்பதை நாம் பார்ப்போம்

தொலைக்காட்சியில் தொழில்நுட்ப புரட்சி என்பது திரை காட்சிகளின் தெளிவுத்திறன் ஆகும். தெளிவுத்திறனை அளப்பதற்கு ஒரு முறை உள்ளது. எப்படி நாம் நிலத்தை அளப்பதற்கு மீட்டர் சென்டிமீட்டர், நீரை அளப்பதற்கு லிட்டர், பொருட்களை அளப்பதற்கு கிலோ, என்றெல்லாம் அளவு வைத்திருக்கின்றோமோ அதுபோல் தொலைக்காட்சியில் வரும் காட்சிகளின் தெளிவு திறனை அளப்பதற்கு பிக்சல் என்ற முறை கையாளப்படுகிறது. பிக்சல் என்றால் மிக மிக சிறிய புள்ளிகள். அவை தொலைக்காட்சி திரையில் குறுக்கும் நெடுக்குமாக நிறைந்திருக்கும் ஒரு சென்டிமீட்டரில் எத்தனை புள்ளிகள் இருக்கின்றன என்பதைக் கொண்டு அதன் தெளிவுத்திறனை அளப்பார்கள். பொதுவாக 1280X720 புள்ளிகள் இருக்க வேண்டும். இதை ஹை டெஃபனிஷன் HD என்று அழைப்பார்கள். இந்த நுண்ணிய புள்ளிகள் தான் நாம் பார்க்கும் காட்சிகளின் வண்ணங்களை நமக்கு காட்டுகின்றன.

முதன் முதலில் தொலைக்காட்சிகளில் தெளிவுத் திறனில் புரட்சி என்பது இந்த HD மூலமாக தான் ஏற்பட்டது. தற்போது நாம் இந்த HD யிலிருந்து 8K தெளிவுத்திறனுக்கு வளர்ந்துள்ளோம். தொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் இது மிகப்பெரிய வளர்ச்சியாகும். காலம் செல்ல செல்ல தொலைக்காட்சி திரையின் அளவு 50 இன்ச் க்கும் மேலாக பெரிதாக வடிவமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்த HD தெளிவுத்திறன் அவ்வளவாக பொருந்தவில்லை. அதனால் HD யிலிருந்து FULL HD என்ற தெளிவுத்திறனுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த FULL HD யின் பிக்சல் அளவு 1920X 1080 ஆகும்.

இந்தப் FULL HDக்கு பிறகு 4K தெளிவுத்திறன் வந்தது. இதை அல்ட்ரா ஹை டெபினிஷன் (ULTRA -HIGH -DEFINITION) என்றும் அழைப்பார்கள். இதன் பிக்சல் அளவு 3840X 2060 ஆகும். ஆனால் உண்மையில் சினிமா காட்சிகள் 4000 பிக்சல் கொண்டவை. டிவிக்களின் திரைகளுக்கு 4000 பிக்சலை ஒளிபரப்பும் தகுதி இல்லை. எனவே 256 பிக்சல் குறைக்கப்பட்டது. மேலும் தொலைக்காட்சிக்கு என்று ஒரு விகிதம் உள்ளது. அது 16:9 ஆகும். அந்த விகிதத்திற்கு ஏற்றார் போல் திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் காட்சிகளை திரையில் பார்க்கும் போது பெரிய மாற்றம் ஏதும் தென்படாது. பொதுவாக 4K தெளிவுத்திறன் பெரிய திரை அதாவது 43 இன்ச் அல்லது அதற்கு மேல் உள்ள திரையில் பார்த்தல் சிறப்பாக இருக்கும்.

இன்னும் சிறிது காலத்தில் 4K தெளிவுத்திறன் திறன் கொண்ட டிவிகள் எங்கும் நிறைந்திருக்கும். இந்த 4K மெதுவாக வளர்ந்து வரும் நிலையில் 8K தெளிவுத்திறன் கொண்ட டிவிக்களும் வர துவங்கி விட்டன. இந்த 8Kவும் 8000 பிக்சல்கள் கொண்டதாக இல்லை. 7680X 4320 பிக்சல்கள் கொண்டதாக இருக்கின்றது. மிகப்பெரிய திரையில் மட்டுமே இத்தகைய தெளிவுத்திறனை பார்க்க முடியும் அதாவது 55 இன்ச் க்கு குறையாத திரையில் தான் இதை காண முடியும். இது உண்மையில் மிகவும் விலை உயர்ந்ததாகும். எனவே சோனி, சாம்சங், எல் ஜி போன்ற நிறுவனங்களே இதை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. 4K தெளிவு திறனும் மிகக் குறைவாக தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா டிவிகளிலும் 8K தொழிநுட்பம் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது மிகவும் துல்லியமான காட்சிகளை தத்ரூபமாக நம் வரவேற்பறையில் அமர்ந்து பார்த்து மகிழலாம்.

Tags:    

மேலும் செய்திகள்