பயணிகள் இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வருவதற்கு முன் போன் அழைப்பு மூலம் தகவல் பெறும் வசதியை பெறுவது எப்படி?

இந்த வசதியைப் பெற, ரெயிலில் பயணிப்போர் 139க்கு அழைக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.;

Update:2022-06-04 13:27 IST

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே நிர்வாகம் சேரும் இடம் குறித்து தகவல் அளிக்கும் வசதியை தொடங்கியுள்ளது.

இந்த வசதியைப் பெற, ரெயிலில் பயணிப்போர் 139க்கு அழைக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இந்த சேவையை பயன்படுத்த ஒவ்வொரு எஸ்எம்எஸ் தகவலுக்கும் பயணிகளிடம் ரூ.3 வசூலிக்கப்படும்.

பொதுவாக ரெயிலில் பயணம் செய்வோர், இரவில் தூங்கமாட்டார்கள். தாங்கள் இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வந்துவிட்டதா என்பதை உறங்காமல் கவனித்து கொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனை தவிர்க்கும் பொருட்டு, இந்த புதிய வசதியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த சேவையின் கீழ், பயணிகளுக்கு இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படும்.

இறங்க வேண்டிய ரெயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு மொபைலில் அலாரம் போல அழைப்பு வரும். இந்த சேவை இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை கிடைக்கும்.

இந்த வசதியை பெற, 139 எண்ணை தொடர்பு கொண்ட பின் அதில் கூறப்படும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலில், பயணிகள் தங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, 7வது ஆப்சனை அதாவது எண் 7ஐ அழுத்த வேண்டும்.

அதன்பின், எண் 2ஐ அழுத்த வேண்டும்.பின்னர் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை குறிப்பிட வேண்டும். இறுதியாக எண் 1ஐ அழுத்த வேண்டும்.

தொடர்ந்து, அதை சரிபார்த்தபின், பயணிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும். இறுதியில், பயணி இறங்க வேண்டிய இடத்திற்கு ரெயில் சென்றடைவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் போன் அழைப்பு வரும்.

அதேபோல, ஜூலை 1 முதல், ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முறையை கொண்டுவர ரெயில்வே முடிவெடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்