பாஞ்சிங்ஷான் மலை

சீனாவின் குயிஸூ மாகாணத்தில் உள்ள டோங்ரன் நகரத்தில் வீற்றிருக்கிறது இயற்கையின் கொடையான பாஞ்சிங்ஷான் மலை.

Update: 2022-08-19 12:08 GMT

சமீபத்தில் தான் யுனெஸ்கோ இதற்கு பாரம்பரிய நினைவுச்சின்ன அங்கீகாரத்தை அளித்து கவுரவப்படுத்தியது. 8430 அடி உயரம் கொண்ட இந்த மலை ஆன்மிக தலமாகவும் கருதப்படுகிறது. செங்குத்தாக செல்லும் இந்த மலையின் உச்சியை இரண்டு புத்த கோவில்கள் அலங்கரிக்கின்றன.

ஒரு காலத்தில் இங்கே 48 கோவில்கள் இருந்தனவாம். கால்நடையாகவும் செல்லலாம். கேபிள் கார் வசதியும் உள்ளது. ஆனால், கால்நடையாக மலையேறினால் பாஞ்ஜிங்ஷானில் இருக்கும் பல்லுயிர்களையும் இயற்கையின் அற்புதங்களையும் தரிசிக்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்