வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்

Seizure of tobacco products stored at home;

Update:2022-11-15 22:09 IST

ஆரணி

வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் மரகதம் (வயது 70). இவரது வீட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை அறை எடுத்து பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சென்று சோதனை நடத்தி ரூ.78 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மரகதம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடையவர் யார் என விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்