33 வாக்குச்சாவடி அதிகாரிகளின் மரணம் சரியா? - மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய கபில்சிபல்

ஒரு ஊடுருவல்காரர் கூட பிரச்சினை என்றால், 33 வாக்குச்சாவடி அதிகாரிகளின் மரணம் சரியானதா? என கபில்சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2025-12-30 01:24 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசை மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘மேற்கு வங்காள வாக்குச்சாவடி அதிகாரியின் மூலம் மற்றுமொரு தற்கொலை. நாடு முழுவதும் இதுவரை 33 பேர் மரணம். ஒரு ஊடுருவல்காரர் கூட பிரச்சினை என்றால், 33 வாக்குச்சாவடி அதிகாரிகளின் மரணம் சரியானதா?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக, ஊடுருவல்காரர்களால் நாட்டுக்கு பிரச்சினை எனக்கூறிய உள்துறை மந்திரி அமித்ஷா, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் அவர்களை கண்டறிந்து விரட்டியடிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்