தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update:2025-12-29 21:10 IST

சென்னை, 

அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரசாரத்தில் 178-வது தொகுதியாக திருத்தணியில் பிரசாரம் மேற்கொண்டார். திருத்தணி - சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெல்லும். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்ததா? அவர்கள் குடும்பம் மட்டும் வளமாகியது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசு தி.மு.க. அரசு.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சென்னை முதல் திருத்தணி செல்லும் ரெயிலில் ரீல்ஸ் எடுத்தபடி 4 சிறுவர்கள் துன்பப்படுத்துகிறார்கள். கொடூரமாகத் தாக்குகிறார்கள்.சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. தி.மு.க.காரர்கள் தான் போதை விற்பனைக்கு துணை நிற்பதாக பேசப்படுகிறது. நம் குழந்தைகளை நாம் தான் பார்த்து வளர்க்க வேண்டும். இந்த ஆட்சியை நம்பி பிரயோஜனம் இல்லை” இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்