வைக்கோல் படப்பு தீயில் எரிந்து சேதம்
வைக்கோல் படப்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது.;
தொண்டி,
தொண்டி பேரூராட்சி 2-வது வார்டு நரிக்குடி கிராமத்தில் காற்று பலமாக வீசியதில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசின. அதில் ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த அதே பகுதியை சேர்ந்த விவசாயி பிரான்சிஸ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் விழுந்து வைக்கோல் படப்பு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.