ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு

ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-12-27 16:14 IST

சென்னை,

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன் கூறியதாவது,

"நான் ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் நிச்சயம் போட்டியிடுவேன். சீட் கொடுத்தால் கூட்டணி, இல்லையென்றால் தனியாக நிற்போம்." எனக் கூறியுள்ளார்.ஆண்டிப்பட்டியை ரிசர்வ் செய்து தினகரன் களமிறங்கி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

"திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா? தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சிகளும், கூட்டணியை உருவாக்க முயற்சிக்கும் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை.

நண்பர் அண்ணாமலை எங்களை அலைபேசியிலும், நேரிலும் சந்திக்கும் போதெல்லாம் என்.டி.ஏ கூட்டணிக்கு வர வேண்டும் என்றுதான் சொல்கிறார். ஆனால், அதுகுறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. கூட்டணிக்காக என்னிடம் பேசுவார்களே தவிர, நான் யாரையும் நேரில் சந்திக்கவில்லை.

ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி. இல்லை என்றால் தனியாக கூட ஆண்டிப்பட்டி தொகுதியில் நிற்போம். பூத் கமிட்டி வேலைகளை முறையாக பாருங்கள். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால் நானே அறிவிப்பேன். எங்களின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்குத்தான் நாங்கள் செல்ல இருக்கிறோம். தை மாதத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது." என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்