அரவைக்காக தலா 1,000 டன் நெல்

நாகையில் இருந்து திருச்சி, ராஜபாளையத்திற்கு அரவைக்காக தலா 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-12-06 18:45 GMT

நாகையில் இருந்து திருச்சி, ராஜபாளையத்திற்கு அரவைக்காக தலா 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

கொள்முதல்

விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திருப்பூண்டி, சன்னமங்கலம், காடம்பாடி, அருந்தவன்புலம், கொத்தங்குடி, சாட்டியகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வந்தது.இந்த நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

2,000 டன் நெல்

அதன்படி நாகையில் இருந்து அரவைக்காக 1000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் திருச்சிக்கும், 1000 டன் சன்ன ரக நெல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர்.இதையடுத்து நெல்முட்டைகளுடன் சரக்கு ரெயில் திருச்சி, ராஜப்பாளையத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்