அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது.;

Update:2022-08-01 23:13 IST

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் 108 பால்குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி அபிராமேஸ்வரர் சன்னதியில் இருந்து முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குபேரன் செட்டியார்- சரஸ்வதி குடும்பத்தினர் தலைமையில் பெண் பக்தர்கள், பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் திருவாமாத்தூர் மாடவீதிகளின் வழியாக வலம் வந்து முத்தாம்பிகை சன்னதியை அடைந்தது. தொடர்ந்து, அங்கு முத்தாம்பிகையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர் குபேரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, அர்ச்சகர்கள் அருணாச்சல சிவாச்சாரியார், மகேஷ் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்