விஜய் கைகாட்டுபவர்களே எம்.எல்.ஏ.க்கள்- செங்கோட்டையன் பேட்டி

நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன என்று செங்கோட்டையன் கூறினார்.;

Update:2026-01-12 07:50 IST

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள், கோத்தகிரி அருகே உள்ள பேரகணி கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலுக்கு பாரம்பரிய உடையணிந்து சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன் பேரகணி ஹெத்தையம்மன் கோவிலுக்கு கட்சியினருடன் சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் முக்கிய நிகழ்வான ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்று வழிபடுவதற்காக இங்கு வந்தேன். நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் யாரை கைகாட்டுகிறாரோ, அவர்கள் தான் அந்த 3 தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்