108 சிவலிங்க தரிசனம்
விருதுநகரில் 108 சிவலிங்க தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.;
விருதுநகர் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 108 சிவலிங்க தரிசனமும், தீப தியானமும் நடைபெற்றது. சத்யம், சிவம், சுந்தரம் என்ற சிவபெருமானின் அருளை அனைவரும் பெற வேண்டி இந்த சிவலிங்க தரிசனம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு 108 சிவலிங்க தரிசனம் செய்தனர். தீப தியானத்திலும் கலந்து கொண்டனர்.