‘இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ - நயினார் நாகேந்திரன்

ஆங்கிலப் புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-01 09:02 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பழையதைப் பின்னால் விட்டுவிட்டு, புதிய நம்பிக்கையுடன் முன்னே செல்லும் நாள் இன்று. புதிய கனவுகள், புதிய இலக்குகள், புதிய முயற்சிகளுடன் வாழ்க்கைக்கு ஒரு புத்தம் புதிய தொடக்கம் தரும் ஆங்கிலப் புத்தாண்டு பாரத மக்கள் அனைவருக்கும் இனியதாக அமையட்டும்.

அமைதி, ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி என அனைத்தும் உங்கள் இல்லத்தையும் வாழ்க்கையையும் அலங்கரிக்கட்டும். 2026 ஆம் ஆண்டு உங்கள் உழைப்புக்கு பலன் தரும், நம்பிக்கைக்கு வழி காட்டும் சிறந்த ஆண்டாக மலரட்டும். இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்