1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-04 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக ஆர்.எஸ்.மங்கலம் வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலுகவயல் கிராமம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பைகளில் 1800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள் திருவாடானையில் உள்ள நுகர் பொருள் வணிக கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் அருகே உள்ள மேலப் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(வயது 27)என்பதும், சிலுகவயல் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கடத்தி சென்றதும் தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்