புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
நெகமம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை கைது செய்தனர்;
நெகமம்,
நெகமம் அருகே காட்டம்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 8 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் காட்டம்பட்டியை சேர்ந்த மோகன்துரை (வயது 50) என்பதும், அவர் மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் மோகன்துரையை கைது செய்தனர். அதேபோல் நெகமம்-தாராபுரம் சாலையில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஜெகதீஸ்வரன்(35) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.