2 செல்போன் கோபுரங்கள் மாயம் போலீசார் விசாரணை
2 செல்போன் கோபுரங்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
காரைக்குடி
சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தஜ்மல்ஹான் (வயது 39). இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட எல்லைக்குள் இவரது நிறுவனம் அமைந்துள்ள செல்போன் கோபுரங்களை கண்காணிப்பது இவரது பணியாகும். இவரது நிர்வாகத்தின் கீழ் உள்ள காரைக்குடி முத்துப்பட்டணம் பள்ளிவாசல் தெருவில் இருந்த செல்போன் கோபுரம், குறிச்சிபுரவு அருகே அமைக்கப்பட்டிருந்த செல்போன் கோபுரம் ஆகியவை 2017-ம் ஆண்டிலிருந்து செயல்படாமல் இருந்தது.தற்போது செல்போன் கோபுரங்களை காணவில்லை. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 65 ஆயிரமாகும்.
இது குறித்து தஜ்மல்ஹான் காரைக்குடி கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார்.கோர்ட்டு உத்தரவின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான செல்போன் கோபுரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.