தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
ஓசூர் பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.;
ஓசூர்
ஓசூர் ராம் நகரை சேர்ந்தவர் நஜீம் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் மற்றும் மனைவி ஆகியோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நஜீம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோன்று ஓசூர் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (45) தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.