மது பாட்டில், புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
மது பாட்டில், புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடி குளக்கரையில் மறைவான இடத்தில் வைத்துக்கொண்டு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இலுப்பூர் தாலுகா, விளாப்பட்டி ஆரோக்கியசாமி (வயது 47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதேபாேல் குமாரமங்கலத்தில் பெட்டிக்கடை வைத்துள்ள இளங்காமணி (40) என்பவர் அவரது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இளங்காமணியை போலீசார் கைது செய்தனர்.