நல்லகண்ணு பிறந்தநாள்: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

நல்லகண்ணு இன்று தனது 101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;

Update:2025-12-26 15:37 IST

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 101வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான பெரியவர் தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 101-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்னும் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்