சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிக்கினர்

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-06-30 00:15 IST

சின்னசேலம், 

சின்னசேலம் போலீசார் அண்ணா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும், திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சிறுவாச்சூர் சாலையம்மன் நகரை சேர்ந்த மோகன் மகன் குணசேகரன் (வயது 29), அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (39) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் சின்னசேலம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்தபோது, சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்