2 பாம்புகள் பிடிப்பட்டது

நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டையில் 2 பாம்புகள் பிடிப்பட்டது.;

Update:2023-09-05 23:57 IST

ஜோலார்பேட்ட

நாட்டறம்பள்ளி அருகே பையனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது வீட்டின் பின்புறத்தில் மலை பாம்பு பதுங்கியிருந்த கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த சுமார் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் குடிசை வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் வனத்துறையினர் அருகில் உள்ள காப்புக்காட்டில் மலைப்பாம்பு உள்ளிட்ட 2 பாம்புகள் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்