ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update:2023-08-25 01:28 IST

கீரனூர் அருகே இளையவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் மனைவி சுமதி. இவர் குளத்தூரில், காமாட்சி என்பவர் வீட்டில் தான் வளர்த்து வந்த 6 ஆடுகளை கட்டி வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆடுகளை திருடியது கீரனூர் எழில்நகர் பகுதியை சேர்ந்த மேத்யூ மகன் யோஸ்வா பிரின்ஸ் (வயது 26), ஈச்சங்காடு பாண்டியன் மகன் கோவிந்தராஜ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்