தமிழக தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
தமிழக தலைமைச்செயாளர் ராம்மோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.;
சென்னை,
தமிழக தலைமைச்செயாளர் ராம்மோகனராவ் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அண்மையில் சென்னையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.120 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தலைமைசெயாளர் வீட்டில் ராம் மோகன் ராவின் வீட்டில் சோதனை நடத்தி வருவது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.