எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 94.5 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-05-23 03:51 GMT
சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 16-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடைந்தது. தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதில் பள்ளி மாணவிகள் 4,81,371 பேர், மாணவர்கள் 4,83,120 பேர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதியுள்ளனர்.

இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.  இதில் 94.5 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 9.5 லட்சம் பேரில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்