வீரமங்கை வேலு நாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை
மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்;
சென்னை,
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.