கோட்டையில் போராட்டம் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-05-24 19:45 GMT
சென்னை, 

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு 24 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். தி.மு.க. தொண்டர்களும் 400–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட இடத்தில் கூட்டமாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டி 2 சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலின் மீதும் அவரோடு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் மீதும் கோட்டை போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்தனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நேற்று தி.மு.க. சார்பில் 26 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையொட்டி 109 பெண்கள் உள்பட 1,746 பேர் கைது செய்யப்பட்டதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்