தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு- சாலைகள் வெறிச்சோடின

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது

Update: 2020-08-02 01:58 GMT
கோப்பு படம் (பிடிஐ)
சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தினம் பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.

தடைகளை மீறி வாகனங்களில் வருபவர்களை போலீசார் எச்சரித்து  அனுப்புகின்றனர் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.  சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை உள்பட தமிழகத்தின்  முக்கிய நகரங்கள் வெறிச்சோடி  காணப்படுகின்றன.

மேலும் செய்திகள்