தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,008 குறைவு; ஒரு பவுன் ரூ.40,320-க்கு விற்பனை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,008 குறைந்து, ஒரு பவுன் ரூ.40,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-08-20 23:30 GMT
சென்னை,

தங்கம் விலை கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328 என்ற வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. அதற்கு மறுநாளில் இருந்து தங்கம் விலை சரிவை நோக்கி சென்று, மீண்டும் 14-ந்தேதி உயர்ந்து காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2 நாட்கள் விலையில் மாற்றம் இல்லாமல், கடந்த 17-ந்தேதி விலை அதிகரித்தது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக விலை தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.126-ம், பவுனுக்கு ரூ.1,008-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 40-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி பவுனுக்கு ரூ.1,104 குறைந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.1,008 குறைந்திருக்கிறது. வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக இறங்குமுகத்தில்தான் உள்ளது. நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் 70 காசும், கிலோவுக்கு ரூ.1,700-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.72 ரூபாய் 70 காசுக்கும், ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 700-க்கும் விற்பனை ஆனது. 

மேலும் செய்திகள்