பால் கொள்முதல் விலை உயர்வு - அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-05-07 20:55 GMT
சென்னை,

பால்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28-ல் இருந்து ரூ.32 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் எருமைப்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35-ல் இருந்து ரூ.41 ஆக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 மட்டும் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பால் விற்பனை விலையினை அரசு நன்கு பரிசீலனை செய்து அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.6-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு ஆணை வருகிற 16-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்