பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்: காங்கிரஸ் அறிக்கை

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் அறிக்கை விடுத்துள்ளது.;

Update:2021-06-11 21:44 IST
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று  தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்