விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-18 05:53 GMT
சென்னை,

2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை, தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகம் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். முட்டுக்காட்டில் ரூ.8.80 கோடியில் மீன்வளர்ப்பு தொழில் நுட்ப தொழில்சார் கல்வி நிலைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருச்சி ஜீயபுரத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வளங்குன்றா நீர் உயிர் வளர்ப்பு மையம் கட்டத்தையும் திறந்து வைத்தார். மேலும் ஓசூர் கால்நடைப்பண்ணையில் ரூ.6.75 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்