மினிலாரி என்ஜின் நம்பரை மாற்றி மோசடி

மினிலாரி என்ஜின் நம்பரை மாற்றி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-05-15 23:52 IST
மினிலாரி என்ஜின் நம்பரை மாற்றி மோசடி
மினிலாரி என்ஜின் நம்பரை மாற்றி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மினிவேன்
பாகூரை அடுத்த கரையாம்புத்தூர் சொர்ணாவூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (வயது 36). இவர் கடந்த ஆண்டு சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த டேனியல் என்பவரிடம் இருந்து பழைய மினி லாரியை வாங்கி தனது தங்கை சியாமளாவிடம் கொடுத்தார். அவர் அந்த மினிலாரியை ஜல்லி, மணல் வியாபாரத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில்      தனது  தங்கைக்கு வாங்கி கொடுத்த மினிவேனின் எண்ணில் குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் மற்றொரு மினிவேன் இயங்கியது. இதுகுறித்து அறிந்த ஞானப்பிரகாஷ் அதிர்ச்சி  அடைந்தார்.  இது குறித்து பாகூர் போலீஸ் நிலையத்தில் ஞானப்பிரகாஷ் புகார் செய்தார்.
மேலும் 2 பேர் கைது
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பாகூர் பங்களா தெருவை சேர்ந்த சங்கர் மினிலாரியின் என்ஜின் நம்பரை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
தொடந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரிடம் மினி லாரியை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இதேபோல் 3 மினி லாரிகளை என்ஜின் நம்பரை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 3 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவருக்கு உதவியாக கடலூரை சேர்ந்த குமரன் (43) என்பவர் இருந்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்