"பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும்..." - அன்புமணி ராமதாஸ்
பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறிவிடும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;
சேலம்,
பாட்டாளி மக்கள் கட்சி ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறிவிடும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், 35 வயதில் மத்திய மந்திரியாகி எல்லாவற்றையும் பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்திய தலைவர்கள், உலகத் தலைவர்கள் என அனைவரையும் பார்த்துவிட்டேன். எனக்கு வேண்டியது தமிழகத்தின் முன்னேற்றம் மட்டுமே. பாமகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார்.