கொடைக்கானல் மலர் கண்காட்சி மே 24-ல் தொடங்குகிறது..!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது;
‘மலைகளின் இளவரசி’, ‘கோடை வாசஸ்தலம்’ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். மேலும் கோடைகாலத்தில் இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். மேலும் கோடைகால குளு, குளு சீசனையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படும்
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் .