ரூ.19 லட்சம் மதிப்பில் 3 புதிய மின் மாற்றிகள்

கலசபாக்கம் தொகுதியில் ரூ.19 லட்சம் மதிப்பில் 3 புதிய மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;

Update:2023-07-31 18:05 IST

கலசபாக்கம்

கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் தென்மாதிமங்கலம், புதுப்பாளையம் ஒன்றியம் வீரானந்தல் அடிவாரம், தேவானந்தல் ஆகிய ஊராட்சிகளில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய மின் மாற்றிகளை பொது மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர். பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

அப்போது கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்