வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது.;

Update:2023-03-05 02:20 IST


மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

பட்டமளிப்பு விழா

நாடார் மகாஜன சங்கம் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 33-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர், தாளாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் கல்லூரியில் கற்ற ஒழுக்கத்தை வரக்கூடிய காலங்களில் வெளிப்படுத்தவும், பட்டம் பெற்ற பின் வரக்கூடிய தம் வாழ்க்கையை மிகவும் அழகாகப் பயன்படுத்த வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லவிதத்தில் சிந்தித்து பயன்படுத்தினால் நம் நாடு மேலும் வளர்ச்சி அடையும். புதுவிதமான தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு முயற்சி செய்தால் இஸ்ரோவில் அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். இந்திய அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறமையைக் கண்டறிந்து அதற்கென ஆராய்ச்சியை ஊக்குவிக்க இஸ்ரோ வழிகாட்டி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

962 பேருக்கு பட்டம்

விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான வெங்கடேசன், இஸ்ரோ சிவன் ஆகியோர் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 560, மாணவிகள் 402 என மொத்தம் 962 பேருக்கு பட்டம் வழங்கினர். முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர்(பொ) சுரேஷ்குமார் வரவேற்றார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் துணைத்தலைவர் பொன்னுச்சாமி, இணைச்செயலாளர் ஆனந்தகுமார், நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், பொருளாளர் பாண்டியன், துணை முதல்வர் செல்வமலா், சுயநிதிப்பிரிவு இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் துணைப்பொறுப்பாளர் முத்துராயர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்