என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்படாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
10 நாளைக்கு ஒருமுறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் எனக்கு முழு திருப்தி ஏற்படுகிறது. கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும். ஒரு உற்சாகம் வந்துவிடும். வேகம் வந்துவிடும்.புத்துணர்ச்சி வந்துவிடும். கொளத்தூர் என்று பெயர் சொன்னாலே சாதனை அல்லது ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள்.
அமைச்சர்களே பொறாமைப்படும் அளவுக்கு கொளத்தூர் தொகுதி சிறப்பாக உள்ளது. 10 நாளுக்கு ஒரு முறை கொளத்தூர் வந்தால் தான் திருப்தி. கொளத்தூர் மக்கள் அளிக்கும் வரவேற்பில்தான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் உள்ளார் என்பதற்கு எத்தனையோ உதாரணம் உள்ளது. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். என் வெற்றிக்கு காரணம் என் மனைவிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.