அட்டகாசம் செய்த 40 குரங்குகள் பிடிபட்டன

ஆடுதுறையில் அட்டகாசம் செய்த 40 குரங்குகள் பிடிபட்டன.;

Update:2023-03-24 01:09 IST

ஆடுதுறையில் அட்டகாசம் செய்த 40 குரங்குகள் பிடிபட்டன.

குரங்குகள் அட்டகாசம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. குரங்குள் கூட்டம் கூட்டமாக வந்து வணிகர்களையும், பொதுமக்களையும் அலறவிட்டன.

வீடுகளில் புகுந்தும் வணிகர்களின் கடைகளில் புகுந்தும் பொருட்களை எடுத்துச் செல்வது, சாலையில் செல்பவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவது என குரங்குகள் தெல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குரங்குகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான பொதுமக்களும் வணிகர்களும் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குரங்குகளை பிடிக்குமாறு மனுக்கள் கொடுத்தனர்.

மனுக்கள் அனுப்பி வைப்பு

இதையடுத்து பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின், துணைத் தலைவர் கமலாசேகர், செயல் அலுவலர் ராம்பிரசாத் ஆகியோர் பொதுமக்களின் மனுக்களை வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அலுவலர்கள் விக்னேஷ் பானுப்பிரியா மற்றும் குரங்கு பிடிப்பதில் கைதேர்ந்த சங்கர் தலைமையிலான குழுவினரை கொண்டு நேற்று ஆடுதுறை பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர்.

ஆடுதுறையில் அட்டகாசம் செய்த 40 குரங்குகள் பிடிபட்டன.

பிடிக்கப்பட்ட குரங்குகளை வனத்துறையினர் ஆடுதுறையில் இருந்து பிடித்து சென்று வனத்துறை பாதுகாப்பில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். குரங்குகள் பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த பொதுமக்களும், வணிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்