புத்தாண்டு விடுமுறை: மெரினா கடற்கரையில் அலைமோதும் கூட்டம்

சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.;

Update:2026-01-01 17:50 IST

"சென்னை:

புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை 4 மணி முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக் காடசியளிக்கிறது. நேற்று மாலை முதல் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன.

ஆனால், இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடலூரில் வெள்ளி கடற்கரையிலும் மக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் அலைமோதுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்