புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்... மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்
மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியை சேர்ந்த கவுதம் என்பது தெரிய வந்தது.;
சென்னை,
சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில் தனியாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் மழை பொழிந்து அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு காலை முதலே போதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.