468 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

468 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்;

Update:2023-06-29 01:15 IST

சூலூர்

சூலூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்து இருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் பாப்பம்பட்டியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முருகராஜ் (வயது48) என்பவர் விற்பனைக்காக 468 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

உடனே அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த முருகராஜை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்