பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

ஓசூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-05-26 19:01 IST

ஓசூர்:

ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியை சேர்ந்தவர் வைசாலி (வயது 32). இவர் கடந்த, 22-ந் தேதி இரவு வீட்டருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் வைசாலி கழுத்தில் இருந்த, 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைசாலி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இது குறித்து வைசாலி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்