டிராக்டர்களில் மண் கடத்திய 5 பேர் கைது

டிராக்டர்களில் மண் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-09 01:28 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு- நாங்குநேரி ரோடு செங்கமால் அருகே அம்பையை சேர்ந்த சுடலை (வயது 34) என்பவர் உள்பட 6 பேர் ஓட்டி வந்த டிராக்டர்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது உரிய அனுமதியின்றி குளத்து மண்ணை கடத்தியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலை மற்றும் கல்லூர் நாகராஜன் (30), ஆலங்குளத்தை சேர்ந்த பிரான்சிஸ் (34), சேரன்மாதேவியை சேர்ந்த சேதுராமன் (30), முப்புடாதி (22) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 டிராக்டர்கள், 6 யூனிட் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்