மின்சாரம் இல்லாததால் 500 கறிக்கோழிகள் இறப்பு
கீழ்வில்லினம் கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் 500 கறிக்கோழிகள் இறந்து விட்டன.;
வந்தவாசி
கீழ்வில்லினம் கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் 500 கறிக்கோழிகள் இறந்து விட்டன.
வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவனம் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்மாற்றியை சரி செய்ய வேண்டும் என்று மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கீழ்வில்லிவனம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் கோழிப்பண்ணையில் மின்சாரம் இல்லாததால் 400-க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் இறந்தன. மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், விஜய், தசரதன், கோவிந்தன் ஆகியோரின் கோழிப்பண்ணையில் மின்சாரம் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் இறந்தன. இதனால் பண்ணையாளர்களுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நாள்தோறும் நஷ்டம் ஏற்படுகிறது என்று உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் வேர் கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை தண்ணீர் இல்லாமல் வாடி வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.