திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, எப்படியாவது உள்ளே நுழைந்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;

Update:2025-12-06 20:15 IST

விழுப்புரம், 

 விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

எஸ்.ஐ.ஆர். என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையம் மூலமாக நம் வாக்குரிமையை பறிக்கிறார்கள். இந்த எஸ்.ஐ.ஆர். திட்டத்தின் மூலமாக அவர்களுடைய முழு நோக்கமே பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்கக்கூடிய, பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களிக்கக்கூடிய இஸ்லாமிய மக்கள், மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை எப்படியாவது தடுத்து பறித்துவிட வேண்டும் என்பதுதான் எஸ்.ஐ.ஆர் திட்டத்தின் நோக்கமாகும்.எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு அ.தி.மு.க-வில் இருக்கிறாரா? இல்லை, பாஜக-வில் இருக்கிறாரா, இல்லை ஆர்.எஸ்.எஸ்.காரராவே மாறிட்டாரா என்று இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்றைக்கு அ.தி.மு.க.-வை அமித்ஷா குத்தகைக்கு எடுத்து, அ.தி.மு.க. அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, அறிக்கை எல்லாம் பார்த்தீர்கள் என்றால் அது அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வந்ததா, இல்லை பாஜக அலுவலகத்தில் இருந்து வந்ததா என்று தெரியாத அளவுக்கு இருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்ச்சிகளை எல்லாம் தாண்டிதான் இன்றைக்கு நம் தலைவர் தமிழ்நாட்டு அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு திருப்பரங்குன்றம், மதுரையில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, எப்படியாவது உள்ளே நுழைந்துவிட முடியாதா என்று பல வழிகளில் அவர்கள் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.ஆனால், அவர்கள் அத்தனை பேருக்கும் நாம் அத்தனை பேரும் தெளிவாக ஒரு பதில் சொல்லியாக வேண்டும். அவர்களின் முயற்சி தமிழ்நாட்டில் பலனளிக்காது. ஏனென்றால் இங்கே நடந்து கொண்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கிடையாது. இங்கே நடந்துக் கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சுயமரியாதை ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.கருப்பு, சிவப்பு கரை வேட்டிக்கூட்டம் இருக்கும்வரை சங்கிகள் தமிழ்நாட்டில் கால் தடம் பதிக்க முடியாது"இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்