பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற7 ஆம்னி வாகனங்களுக்கு அபராதம்
பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற7 ஆம்னி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி ஆகியோர் உடையாப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆம்னி வேன்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், உரிமம் இல்லாமல் வந்த 4 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆம்னி வேன்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் ஆம்னி வேன்கள், கார்கள் பறிமுதல் செய்யப்படும், என்றனர்.