80 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராஜபாளையம் அருகே 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2022-07-19 00:47 IST

ராஜபாளையம், 

சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் மாலையம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் போலீசாரை கண்டதும், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்போது வாகனத்தை சோதனை செய்தபோது 80 மது பாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 80 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தபோலீசார் தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்