50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.;

Update:2022-11-06 01:06 IST

கரூர் மாவட்டம் புகழூர் பசுபதி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 55), விவசாயி. இவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று அங்குள்ள தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது சுமார் 50 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றால் கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்