திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் - பெண் பயணியிடம் விசாரணை
35 வயது பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருச்சி,
சிங்கப்பூரில் இருந்து ‘ஸ்கூட்’ விமானம் நேற்று அதிகாலை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் தனது உடைமையில் மறைத்து போதைப்பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடைமையில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான உயர்ரக போதைப்பொருள் (மெத்தபெட்டமைன்) பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் 2.5 கிலோ இருந்தது. இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பெண் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.