அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு ரூ.49 ஆயிரம் அபராதம்

நெல்லையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு ரூ.49 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-01-10 01:01 IST

நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் ரவுண்டானா பகுதியில் கடந்த 6-ந்தேதி 6 நபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையில் சென்றதாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசனுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு செல்லபாண்டியன் ரவுண்டானா முதல் சீனிவாசநகர் வரை வண்ணார்பேட்டை முதல் தச்சநல்லூர் வரை சுமார் 70 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களை கண்டு பிடித்தனர். கல்லூரி மாணவர்களான அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் ரேஸ் சென்றது, ஹெல்மெட் அணியாமல், 3 பேராக சென்றது என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட அவர்களுக்கு சுமார் ரூ.49 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்